★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Friday, September 14, 2012

மன்னிப்பு பெற்றுவிட்டீர்களா தேவனிடம் இருந்து நான் மன்னிப்பு பெறுவது எப்படி



          
ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு) மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது" என்று அப்போஸ்தலர் 13:38 சொல்கிறது

மன்னிப்பு என்றால் என்ன? அது எனக்கு அவசியமானதாக இருப்பது ஏன்?

           மன்னிப்பு என்ற வார்த்தை கடந்தகால தவறுகளை மறந்து புதிய காரியங்களைச் செய்ய ஆரம்பித்தல், மன்னித்தல், கடனை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. எவரிடமாவது நாம் தவறு இழைத்திருந்தால் அவருடனான நல் உறவில் நிலைத்திருக்க அவரிடம் மன்னிப்பு எதிர்பார்க்கிறோம். ஒரு நபர் மன்னிக்கப்படத்தக்கவர் என்பதினால் மன்னிப்பு கொடுக்கப்படுவதில்லை எவரும் மன்னிப்பைப் பெற தகுதியானவர்கள் அல்ல. மன்னிப்பு என்பது அன்பு இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு செயல் ஆகும். மன்னிப்பு என்பது பிறர் நமக்கு என்ன செய்திருந்தாலும் அவருக்கு விரோதமாக மனதில் எதையும் வைத்திக் கொள்ளாதிருக்கும்படி எடுக்கும் ஒரு தீர்மானம் ஆகும்.

           நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று வேதாகமம் நமக்கு சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை" என்று பிரசங்கி 7:20 அறிவிக்கிறது. "நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களாயிருப்போம் சத்தியம் நமக்குள் இராது." என்று 1யோவான் 1:8 கூறுகிறது.அடிப்படையில் எந்த ஒரு பாவமும் தேவனுக்கு விரோதமான செயலாயிருக்கிறது (சங்கீதம் 51:4). இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையெனில், நாம் நமது பாவங்களின் விளைவுகளினால் வேதனைப்பட்டுக்கொண்டு நமது நித்தியத்தன் கழிபோம் (மத்தேயு 25:46, யோவான் 3:36).

மன்னிப்பு - நான் பெறுவது எப்படி?

           தேவன் அன்புள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் - நம் பாவங்களை மன்னிக்க ஆவலாகவும் இருக்கிறார். "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" என்று நமக்கு 2பேதுரு 3:9 சொல்கிறது. தேவன் நம்மை மன்னிக்க விரும்புகிறார். ஆகவே நம் மன்னிப்புக்கு தேவையானவற்றை அவர் அளித்தார்.

           நமது பாவங்களுக்கான சரியான தண்டனை மரணமே. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர்6:23 அறிவிக்கிறது. நாம் நமது பாவங்களினால் சம்பாதித்தது நித்திய மரணம் ஆகும். ஆனால் தேவன் தமது பரிபூரண திட்டத்தில், இயேசுகிறிஸ்துவாக ஒரு மனிதனானார் (யோவான் 1:1,14). நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று 2கொரிந்தியர் 5:21 நமக்கு போதிக்கிறது. அமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது மரித்தார். தேவனைப் பொறுத்தவரையில், முழு உலகத்தின் பாவத்திற்கும் மன்னிப்பை இயேசுவின் மரணம் அளித்தது. "நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" என்று 1யோவான் 2:2 அறிவிக்கிறது. இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தது, பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியை அறிவிக்கிறது 1கொரிந்தியர் 15:1௨8. தேவனுக்குக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, தேவனுடைய கிருபை வரமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் என்று ரோமர் 6:23 கூறுவது உண்மையானதாக இருக்கிறது.

           உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? மீள முடியாத படித்தோன்றும் குற்ற மனப்பான்மையான் நீங்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவர் மீது நீங்கள் உங்கள் விசுவாசத்தை வைத்தால் உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. "அவருடைய (தேவனுடைய) கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" என்று எபேசியர் 1:7 கூறுகிறது. இயேசு நமக்காக கடனை செலுத்தி தீர்த்தார், ஆகவே நாம் மன்னிக்கப்பட முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கு மனீப்பை அருளும்படி இயேசு மரித்தார் என்பதை விசுவாசித்து, இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அப்போது அவர் உங்களை மன்னிப்பார். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் " என்கிற அற்புதமான செய்தியை யோவான் 3:16,17 உள்ளடக்கியிருக்கிறது.

மன்னிப்பு - உண்மையாகவே சுலபமானதா?

           ஆம்! மன்னிப்பு சுலபமானதே! நீங்கள் தேவனிடமிருந்து மன்னிப்பை சம்பாதிக்க முடியாது. தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெறும்படிக்கு உங்களால் கிரயம் செலுத்தவும் முடியாது. தேவனுடைய இரக்கம் மற்றும் கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக மட்டுமே நீங்கள் அதைப் பெற முடியும். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஜெபிக்கும்படி இங்கு ஒரு ஜெபம் தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது. கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவங்களுக்கான மன்னிப்பை அருளுகிறது. இந்த ஜெபமானது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தை அவரிடம் வெளிப்படுத்தவும் உங்கள் மன்னிப்புக்கு தேவையானவற்றை அருளினதற்காக நன்றி சொல்வதற்குமான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

           நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா அப்படியானால் அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் எங்களுக்கு தெரியப்படுத்த



நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்

No comments:

Post a Comment